தீராத வயிற்று வலியால் அவதி: எலி மருந்து தின்று மூதாட்டி தற்கொலை

தீராத வயிற்று வலியால் அவதியடைந்த மூதாட்டி எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-03 18:53 GMT

ஆலங்குடி அருகே உள்ள வேங்கிடகுளம் தெற்கு தெருவை சேர்ந்த நாராயணன் மனைவி சின்னத்தாள் (வயது 73). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் நீண்ட காலமாக தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சின்னத்தாள் எலி மருந்து தின்று வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று சின்னத்தாள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்