டீக்கடையில் திடீரென கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு

பெண்ணாடம் டீக்கடையில் திடீரென கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-29 18:45 GMT

பெண்ணாடம், 

பெண்ணாடம் மாந்தோப்பு தெருவில் ராஜேந்திரன் (வயசு 57) என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் கடையில் ராஜேந்திரன் டீ போட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கியாஸ் சிலிண்டரில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்