வள்ளியூர் அருகே திடீர் காட்டு தீ
வள்ளியூர் அருகே திடீர் காட்டு தீ ஏற்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் -ஏர்வாடி ரோட்டில் சாமியார் பொத்தை அருகில் ஜெபத்துரை என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு முள் மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றி குவித்து வைத்திருந்தனர். அதில் யாரோ மர்ம நபர்கள் ஏற்படுத்திய தீ, காட்டுத்தீ போல அந்த பகுதி முழுவதும் பரவி மளமளவென எரிந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து வள்ளியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.