நாகையில் 14 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்... விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-05-27 10:08 GMT

நாகப்பட்டிணம்,

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அனைவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் அவர்களை நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். உடனடியாக மருத்துவ குழு காரைக்கால்மேடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டது.

கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதே, வாந்தி, மயக்கத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்