குளச்சலில் திடீர் கடல் சீற்றம்
குளச்சலில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது.
குளச்சல்:
குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக இருக்கும். ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை பாயும். சில நேரங்களில் அழிக்கால் உள்ளிட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடும்.
இதுபோக மற்ற மாதங்களில் புயல் எச்சரிக்கை மற்றும் மழை பெய்யும் நேரத்தில் கடல் ஆக்ரோஷமாக இருக்கும். இந்தநிலையில் ஜூன் மாதம் நெருங்குவதையொட்டி நேற்று குளச்சல் கடல் பகுதி திடீர் சீற்றமாக இருந்தது.
மணற்பரப்பு வரை சீறி பாய்ந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதேபோல் கொட்டில்பாடு பகுதியிலும் கடல் ஆக்ரோஷமாக காட்சி அளித்தது.
கடல் சீற்றத்தால் மணற்பரப்பில் நிறுத்தப்பட்ட வள்ளம், கட்டுமரம் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதே சமயத்தில் சில மீனவர்கள் மீன்பிடிக்க சென்று கரை திரும்பினர். ஆனால் குறைந்த அளவு மீன்களே சிக்கியதாக தெரிவித்தனர்.