பால் விலை திடீர் உயர்வு

விருதுநகரில் பால் விலை திடீரென உயர்ந்தது.

Update: 2023-02-01 19:15 GMT


விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் தனியார் பால் உற்பத்தியாளர்கள் பால்கொள்முதல் மற்றும் விற்பனை விலையில் விட்டருக்கு ரூ. 5 விலை உயர்த்தி கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.45 ஆகவும், விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 50 ஆகவும் நிர்ணயித்துள்ளனர். இதனால் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்திற்கு பால் வரத்து குறையும்நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தில் லிட்டர் ரூ. 42 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பால் விலை உயர்வினால் கடைகளிலும் டீ, காபி விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டில் அதிகம் உள்ள பால் விலையை நிர்ணயம் செய்வதில் ஒரு கட்டுப்பாடு அவசியமென வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தமிழக அரசு பால் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்