தூத்துக்குடியில் திடீர் மழை
தூத்துக்குடியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.
தூத்துக்குடியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.
பருவமழை
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
திடீர் மழை
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று காலையில் வெயில் அடித்தது. மதியத்துக்கு பிறகு வானில் மேக கூட்டங்கள் திரண்டு வந்தன. மாலை 4.30 மணி அளவில் திடீரென மிதமான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து இரவு வரை நீடித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கிடந்தது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சாயர்புரம்
இதேபோல் சாயர்புரம் வட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாயர்புரம் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்.
இதேபோல் விளாத்திகுளம், எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.