திருவட்டார்,
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று இரவு 7 மணி முதல் திருவட்டார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. திருவட்டார், குலசேகரம், ஆற்றூர், சிதறால், மாத்தார், செறுகோல், வீயன்னூர், மாத்தூர், சித்திரங்கோடு, வேர்க்கிளம்பி, திருவரம்பு, இட்டகவேலி, தச்சூர், புத்தன்கடை, புலியிறங்கி, திற்பரப்பு, பூவன்கோடு மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் மிதமாக மழை பெய்தது. மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.