திருவாடானை பகுதியில் திடீர் மழை
திருவாடானை பகுதியில் திடீர் மழை பெய்தது.
தொண்டி,
திருவாடானை பகுதியில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது திருவாடானை பகுதியில் விவசாயிகள் கோடை உழவு பணியை தொடங்கி உள்ள நிலையில் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்ததையொட்டி உழவுப் பணியை மேற்கொள்வதற்கு இந்த மழை பெரிதும் உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.