நெமிலி பகுதிகளில் திடீர் மழை
நெமிலி பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது.
நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பனப்பாக்கம், பள்ளூர், சேந்தமங்கலம், கணபதிபுரம், ரெட்டிவலம், திருமால்பூர், கீழ்வீதி, அகவலம், சயனபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்தது. பின்பு இரவு குளிர்ந்த காற்று வீசியதுடன் திடீரென்று கனமழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மழை விடாமல் பெய்ததால் வேலை மற்றும் வெளியூர்களுக்கு சென்று வீடு திரும்புவோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.