கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் ஒவ்வொரு நாளும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் வழக்கம் போல கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலையில் திடீரென மழை பெய்தது. இந்த மழையால் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், வேளுக்குடி, பழையனூர், நாகங்குடி, வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.