குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-27 19:14 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர்-திருவண்ணாமலை சாலையில் உள்ள மாதாநகரை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வரவில்லை என்றும், குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர்- திருவண்ணாமலை மாதாநகர் பகுதியில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் - திருவண்ணாமலை சாலை பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்