அகவிலைப்படியை உடனடியாக வழங்க கோரி ரெயில்வே பணியாளர்கள் திடீர் போராட்டம்

ரெயில்வே ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி தென்னக ரெயில்வே பணியாளர்கள் நலச்சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-15 20:32 GMT


ரெயில்வே ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி தென்னக ரெயில்வே பணியாளர்கள் நலச்சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீர் போராட்டம்

மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அகவிலைப்படி ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் கணக்கு வைத்திருக்கும் வங்கியால் வழங்கப்பட்டு விட்டது. இதற்கிடையே, மதுரை கோட்டத்தில் பணியாற்றும் ரெயில்வே பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் இருந்த அகவிலைப்படி தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து, அந்த வங்கி கிளை அலுவலகம் முன்பு, தென்னக ரெயில்வே பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொது செயலாளர் நவுசாத் அலி தலைமையில் ரெயில்வே ஓய்வூதியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுப்பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை கோட்டத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதேபோல, மதுரை கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் சுமார் 13 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் மற்றொரு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு விட்டது.

பேச்சுவார்த்தை

எனவே வங்கி நிர்வாகம் மதுரை கோட்ட ரெயில்வே ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் போட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து வங்கியின் உதவி பொதுமேலாளர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் மும்பையில் உள்ள வங்கி மையத்துக்கு இந்த விவகாரம் குறித்து உடனடியாக இ-.மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய ரெயில்வே ஓய்வூதியர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் குமார், பாலசந்திரன் மற்றும் ரெயில்வே ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்