மலையில் திடீர் தீ

தெள்ளாந்தியில் மலையில் திடீர் தீ

Update: 2023-01-28 18:40 GMT

அழகியபாண்டியபுரம், 

பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி மலை பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று வேகமாக வீசியதால் செடி, கொடிகள் தீயில் எரிந்து கருகின. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கும், பூதப்பாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்