சமையல் கியாஸ் சிலிண்டரில் திடீர் தீ விபத்து
சமையல் கியாஸ் சிலிண்டரில் திடீர் தீ விபத்து நடந்துள்ளது.
நொய்யல்,
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 50). இவரது மனைவி வீட்டில் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் சிலிண்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று சிலிண்டரில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை ஈரச்சாக்கு மற்றும் ரசாயன பவுடர் மூலம் அனைத்து கட்டுப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.