பூசாரிப்பட்டி அருகே ஓடும் காரில் திடீர் தீ

பூசாரிப்பட்டி அருகே ஓடும் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

Update: 2022-06-03 21:29 GMT

ஓமலூர், 

தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரசாக் (வயது 48). நேற்று முன்தினம் இவர் வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்க அவரது நண்பர் சந்திரன் என்பவரின் கியாஸ் சிலிண்டர் நிரப்பப்பட்டு இருந்த மாருதி காரை வாங்கி கொண்டு பூசாரிப்பட்டிக்கு சென்றார். பூசாரிபட்டி மேம்பாலத்தில் மாலை 5 மணி அளவில் கார் வந்த போது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே காரை நிறுத்தி விட்டு ரசாக் இறங்கி விட்டார். பின்னர் அவர் காடையாம்பட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்