சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-27 22:53 GMT

தீ விபத்து

சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். எப்போது பார்த்தாலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆஸ்பத்திரியின் வடக்கு பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை அறை உள்ளது.

அறைக்கு அருகில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறையின் மேல் பகுதியில் செல்லும் வயர்களில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த வயர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

பரபரப்பு

இது குறித்து அங்கிருந்தவர்கள் சேலம் டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை. இந்த தீவிபத்தால் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்