தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

சிப்காட் தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-07-26 18:35 GMT

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் பேட்டரி வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் குடோனில் பழுதடைந்த உதிரி பாகங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மின் கசிவு காரணமாக குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். குடோனில் வைப்பட்டிருந்த பழுதான உதிரிபாகங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்