குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு
குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
சென்னை,
குவைத்தில் இருந்து சென்னைக்கு, 158 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 11.05-க்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் குவைத்தில் தரையிறக்கப்பட்டு, கோளாறை சரி செய்த பிறகு மீண்டும் 11:51 மணிக்கு புறப்பட்டது. இதனால், இன்று காலை 6:55 மணிக்கு சென்னை வர வேண்டிய அந்த விமானம், காலதாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.