தொழிலாளி திடீர் சாவு

களக்காடு அருகே தொழிலாளி திடீரென இறந்தார்.

Update: 2023-06-04 19:43 GMT

களக்காடு:

களக்காடு அருகே வீ.கே.நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகேஷ் (36). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகேஷ் தனது மனைவியின் ஊரான காடுவெட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ந்தேதி வீ.கே.நகரில் மகேஷின் குடும்ப கோவிலில் விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மகேஷ் குடும்பத்தினருடன் வீ.கே.நகருக்கு சென்றார். குடும்ப கோவிலில் நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் பக்தர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.

உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மகேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்