தொழிலாளி திடீர் சாவு

விருதுநகரில் தொழிலாளி திடீரென இறந்தார்.

Update: 2023-07-28 19:01 GMT


விருதுநகர் இளங்கோவன் தெருவை சேர்ந்தவர் அசோக் என்ற அசோக்குமார் (வயது49). இவர் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இவர் விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள ஒரு நர்சரியில் வேலை பார்த்து வந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென மயக்கம் வந்ததால் நர்சரி உரிமையாளர் இவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதற்கு மறுத்த அசோக் குமார் டீ மட்டும் வாங்கித் தருமாறு கூறியதாக தெரிகிறது. டீ வாங்கி குடித்த அசோக்குமார் சிறிது நேரத்தில் நர்சரி வளாகத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி அவரது சகோதரர் நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்