விசாரணை கைதி திடீர் சாவு

விசாரணை கைதி திடீரென இறந்தார்.

Update: 2023-02-26 18:09 GMT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மருதநல்லூர் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 30). இவர் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் அடைக்கப்பட்டார். இவர் ஏற்கனவே கைதாகி ஜாமீனில் வெளியே வந்து கோர்ட்டில் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறையில் மகேந்திரனுக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து சிறையில் உள்ள மருத்துவரிடம் முதலுதவி சிகிச்சை பெற்றபின் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்