கல்லூரி மாணவர் திடீர் சாவு

விருதுநகர் அருகே கல்லூரி மாணவர் திடீரென இறந்தார்.

Update: 2023-01-11 18:49 GMT

விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையை சேர்ந்தவர் சுமதி (வயது 40). இவரது மகன் உதயகுமார் (19). தனியார் கல்லூரியில் 2-ம்் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த உதயகுமார் உறவினர் வீட்டில் இருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தார். இந்தநிலையில அவரை உடனடியாக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு உதயகுமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சுமதி கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்