பிரசவத்தில் குழந்தை திடீர் சாவு
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் குழந்தை திடீரென்று இறந்தது. இது குறித்து டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடுகு சந்தை சத்திரத்தை சேர்ந்தவர் லோகேஷ்.இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பவித்ரா. இவர் மகப்பேறுக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்திருப்பதாக குழந்தையை கர்ப்பிணியின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் தாங்கள் தொடர்ந்து டாக்டர்களிடமும் செவிலியர்களிடமும் கர்ப்பிணி நிலை குறித்தும் வயிற்றில் உள்ள குழந்தையின் நிலை குறித்தும் தொடர்ந்து கேட்டு வந்ததாகவும் எந்த தகவலையும் கூறாமல் அலட்சியப்போக்குடன் இருந்ததால்தான் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை வளாகத்தில் தகராறில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.