குழந்தை திடீர் சாவு

பனவடலிசத்திரம் அருகே 11மாத பெண் குழந்தை திடீரென இறந்தது.

Update: 2022-10-28 18:45 GMT

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் பனவடலிச்சத்திரம் அருகே உள்ள ஓடக்கரைப்பட்டி ஊரைச் சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 29). இவருடைய 11 மாத பெண் குழந்தை மதுஸ்ரீ. கடந்த 3 நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாத்திரைகளை வாங்கி வந்து வீட்டில் வைத்து பராமரித்து வந்தார்.

இந்நிலையில் அந்த குழந்தை திடீரென்று பேச்சு மூச்சு இன்றி அசைவின்றி இருந்தது. இதனால் பதறியடித்த வீரபாண்டி உடனடியாக தனது குழந்தையை தூக்கிக் கொண்டு கழுகுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்