கூடலூரில் 7 மாத கர்ப்பிணி திடீர் சாவு-ஆர்.டி.ஓ. விசாரணை
கூடலூரில் 7 மாத கர்ப்பிணி திடீர் சாவு-ஆர்.டி.ஓ. விசாரணை
கூடலூர்
கூடலூர் அருகே தருமகிரி பகுதியைச் சேர்ந்தவர் லினு மேத்யூ (வயது 32). இவரது மனைவி சவுமியா (28). கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சவுமியா 7 மாத கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வழக்கம் போல் தூங்க சென்றார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் சவுமியா எழுந்திருக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.