ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி
ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. செஞ்சியில் பயணிகளை இறக்கிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
செஞ்சி:
வெள்ளிமேடுபேட்டையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று செஞ்சிக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் கண்ணன்(வயது 50) என்பவர் ஓட்டினார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த கண்ணன், பயணிகளிடம் கூறினால் பயந்து விடுவார்கள் என்று எண்ணினார். எனவே நெஞ்சுவலியையும் தாங்கிக்கொண்டு, பஸ்சை செஞ்சிக்கு ஓட்டிவந்தார். அங்கு பயனிகளை இறக்கிவிட்டு அதே பஸ்சை ஓட்டிக்கொண்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் டிரைவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இது சாதாரண நெஞ்சுவலிதான், பயப்படத் தேவையில்லை என்று கூறினர். இதையடுத்து டிரைவர் கண்ணன், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.