தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு

கடையத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-19 18:45 GMT

கடையம்:

கடையம் யூனியன் அலுவலகம் அருகில் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் வால்வு பகுதியில் நேற்று திடீரென தண்ணீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மோட்டாரை ஊழியர்கள் அணைத்தனர். இதையடுத்து தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்