தரமில்லாத குடிநீர் கேன்கள்..உணவு பாதுகாப்பு துறை ஆய்வில் பரபரப்பு..சென்னையில் அதிர்ச்சி

தரமில்லாத குடிநீர் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

Update: 2023-05-19 09:29 GMT

சென்னை,

சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் கேன்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. இதற்கிடையில் உரிய ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாதது, கேன் வாட்டரை சுத்தம் செய்து குடிநீரை விற்பனை செய்வது போன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நோட்டிஸ் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் குடிநீர் தயாரிக்கும் கொண்டித்தோப்பு, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இன்று 19 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், தரமில்லாத குடிநீர் விநியோகம் செய்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், அந்த கடைகளில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

உரிய அனுமதியுடன் குடிநீர் கேன் விநியோகம் செய்யவேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்