மானியத்தில் வேளாண் இடுப்பொருட்கள்
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்படுகிறது.
வேளாண்மை இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு தேவையான தார்பாலின்கள், தெளிப்பான்கள், கடப்பாரை, மண்வெட்டி, அரிவாள், களைக்கொத்து, இரும்பு சட்டியுடன் பண்ணைக்கருவிகள் தொகுப்பு, ஜிப்சம், ஜிங்க் சல்பேட், உயிர் உரங்கள், நுண்ணூட்டக்கலவை, பயிர்பாதுகாப்பு மருந்துகள், தென்னைக்கு இடவேண்டிய போராக்ஸ், தக்கைப்பூண்டு விதைகள், உளுந்து விதைகள், காராமணி விதைகள் ஆகியவை மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50% மான்யத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. சம்பா பருவ நெல் அறுடைக்குப்பின் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி செய்யும் பொருட்டு உளுந்து விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றது.
தென்னையில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த உயிரியல் பூஞ்சாணக் கொல்லி மருந்து மற்றும் இனக்கவர்ச்சிப் பொறிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. மேலும், டி.கே.எம். 13, கோ51 ஆகிய நெல் ரகங்களும், கேழ்வரகு விதைகளும் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்தும், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டும் பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.