சுப்பிரமணியசுவாமி-திருவேங்கட பெருமாள் எதிர்சேவை

எழுமலை மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவேங்கடபெருமாளுடன், சுப்பிரமணியசுவாமி எதிர்சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-05-06 19:16 GMT

உசிலம்பட்டி,

எழுமலை மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவேங்கடபெருமாளுடன், சுப்பிரமணியசுவாமி எதிர்சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை திருவிழா

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது எழுமலை. இந்த ஊரில் பிரசித்தி பெற்ற மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கும் திருவேங்கடபெருமாள் சுவாமிக்கும் எதிர்சேவை நிகழ்வு நேற்று நடைபெற்றது.

எதிர்சேவை

மாதாந்த சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் ஊர்வலமாக வந்தார். திருவேங்கட பெருமாள் கோவிலில் இருந்து திருவேங்கட பெருமாளும் ஊர்வலமாக வந்த நிலையில் எழுமலை பெரிய கண்மாய் கரையில் சுப்பிரமணிய சுவாமிக்கும், திருவேங்கட பெருமாள் சுவாமிக்கும் எதிர்சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மஞ்சள் நீர் தெளித்தும், சாட்டையால் அடித்துக் கொண்டும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்