சுப்பிரமணியபுரம்இசக்கியம்மன் கோவில் கொடை விழா

சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

Update: 2023-05-04 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் இசக்கியம்மன் கோவில் கொடை விழா 5 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் இரவு வில்லிசை, அலங்கார பூஜையும், 2-ம் நாள் மதியம் வில்லிசை, அலங்கார பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு அலங்கார தீபாராதனை நடந்தது. 3-ம் நாள் வில்லிசை, சிறப்பு பூஜையும், 4-ம் நாள் மதியம் அலங்கார பூஜை, பத்திரகாளியம்மன் தீச்சட்டி ஏந்தி நகர்வலம் வந்தார். நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜை, அலங்கார பூஜையும், 5-ம் நாள் காலையில் சுவாமி உணவு எடுத்தல், சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்