போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது. இதில் 4,342 பேர் பங்கேற்றனர்.

Update: 2023-08-26 19:00 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு நடந்தது. இதில் 4,342 பேர் பங்கேற்றனர்.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2023-ம் ஆண்டிற்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதன்மை தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதி தேர்வு என 2 பிரிவுகளாக நடந்தது.

இந்த தேர்வு தூத்துக்குடி பி.எம்.சி. மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலை பள்ளி ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் எழுத்து தேர்வுக்கு விண்ணப்பித்த 5 ஆயிரத்து 144 பேர்களில் முதன்மை தேர்வில் 4 ஆயிரத்து 342 பேரும், தமிழ் மொழி தகுதி தேர்வில் 4 ஆயிரத்து 326 பேரும் தேர்வு எழுதினர்.

டி.ஐ.ஜி. ஆய்வு

தேர்வு மையங்களை நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வில் 5 ஆயிரத்து 144 விண்ணப்பதாரர்களில் முதன்மை தேர்வில் 4 ஆயிரத்து 342 பேரும், தமிழ்மொழி தகுதித் தேர்வில் 4 ஆயிரத்து 326 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். முதன்மை தேர்வில் 802 பேரும், தமிழ்மொழி தகுதித் தேர்வில் 818 பேரும் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்