சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து சாவு

பாவூர்சத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்

Update: 2022-06-05 14:46 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வடமலைபட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 57). இவர் பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு பகுதியில் வசித்து வந்தார்.

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய இவர், மணிமுத்தாறு காவலர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியராகவும் வேலைபார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு மணிமுத்தாறில் பணியை முடித்து விட்டு வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் அருகே வந்தபோது ஜெய்சங்கருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அவர் மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஜெய்சங்கர் பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்