வால்பாறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை-கூட்டத்தில் அதிகாரிகளுக்கு, சப்-கலெக்டர் அறிவுறுத்தல்

வால்பாறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் அறிவுறுத்தினார்.

Update: 2022-10-25 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் அறிவுறுத்தினார்.

வால்பாறையில் ஆய்வு

பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா முதன் முறையாக வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்படி வால்பாறையில் அரசின் உதவி பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த ஒருவரின் வீட்டுக்கு சென்று அவரின் விண்ணப்பத்தின் மீது விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிந்தார். அதனை தொடர்ந்து வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் (பொ) சலாவுதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் ஆகியோருடன் வால்பாறை நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

அப்போது அவர், நகராட்சி நிர்வாகம் சார்பில் வால்பாறை பகுதியில் உரிமங்கள் பெறாமல் நடத்தி வரும் தங்கும் விடுதிகள் காட்டேஜ் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உரிய உரிமங்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய முன்னறிவிப்பு கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து கடைகளிலும் திடீர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பயன்பாடு, போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். படகு இல்லத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் சலாவுதீனிடம் அறிவுறுத்தினார். பின்னர் படகு இல்லம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்