பருவமழை தொடங்க உள்ள நிலையில் சப்-கலெக்டர் ஆய்வு

பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா ஆய்வு செய்தார்.

Update: 2022-10-18 16:55 GMT

பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வந்தவாசி எள்ளுப்பாறை, சவுரியார் பாளையம், பிருதூர் கிராமம் உள்ளிட்ட தாழ்வான நீர்நிலை பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களை செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறும், நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள குடிசைகளை அகற்றுமாறும், அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவிட்டார். தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வந்தவாசி தாசில்தார் முருகானந்தம், நகராட்சி கமிஷனர் மங்கையர்கரசன், நகரமன்ற தலைவர் ஜலால் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்