வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தாா்.
பாபநாசம்;
பாபநாசம் ஒன்றியம் சரபோஜிராஜபுரம் ஊராட்சியில் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி பிரிவு) ஸ்ரீகாந்த் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சரபோஜி ராஜபுரம் ஊராட்சி அலுவலகம் கட்டுதல், காளான் உற்பத்தி மையம், சரபோஜிராஜபுரம் முதல் வடக்கு மாங்குடி வரை சாலைப் பணிகள் ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது பாபநாசம் ஒன்றிய குழுத்தலைவர் சுமதி. கண்ணதாசன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சரவணன், சாமிநாதன் மற்றும் பலர் இருந்தனர்.