பிரசவ வார்டு மேம்பாடு குறித்து ஆய்வு
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மேம்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் 200-க்கும் மேற்பட்ட பிரசவம் நடக்கிறது. ஆகையால் பிரசவ வார்டை மேம்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் மாநில அளவிலான மதிப்பீடு குழுவிவை சேர்ந்த டாக்டர் அருண் நடேஷ் மற்றும் நர்ஸ் ரேவதி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது தற்போது மருத்துவமனையில் உள்ள நிலைமைகள் குறித்தும், படுக்கை வசதிகள், ஆபரேஷன் தியேட்டர் குறித்தும் மருத்துவ அலுவலரிடம் கேட்டு அறிந்தனர்.
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணியன், டாக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.