பாலாற்றில் சிவலிங்கத்தின் அடிப்பாகம் கிடைத்த இடத்தில் ஆய்வு

பெருமுகை பாலாற்றில் சிவலிங்கத்தின் அடிப்பாகம் கிடைத்த இடத்தில் வேறு பொருட்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2022-11-25 17:35 GMT

பெருமுகை பாலாற்றில் சிவலிங்கத்தின் அடிப்பாகம் கிடைத்த இடத்தில் வேறு பொருட்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சிவலிங்கத்தின் அடிப்பாகம்

வேலூர் பெருமுகை பாலாற்றின் கரையோரம் சில கற்கள் தென்பட்டுள்ளது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை பார்த்துள்ளனர். அவர்கள் மண்ணை தோண்டியபோது சில கற்கள் மற்றும் சிவலிங்கத்தின் அடிப்பாகம் தென்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

ஆற்றின் கரையோரம் சிவலிங்கத்தின் அடிப்பாகம் மற்றும் கோவில் கட்டிடத்தில் பயன்படுத்தப்படும் தூண் வடிவமைப்பை கொண்ட கற்கள் தென்பட்டது. இதனை அந்தப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் சென்றனர். இந்த இடத்தில் கோவில் இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சிவலிங்கம் இந்த பகுதியில் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆதலால் முழுமையாக அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

பாலாற்றில் ஆய்வு

இதனிடையே இதுகுறித்து வேலூர் கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். அந்த லிங்கம் 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் தோண்டி வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆனால் வேறு எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து அந்த சிவலிங்கத்தின் அடிப்பாகம் வேலூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்