வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம்

வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-21 19:58 GMT


விருதுநகர் கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் அனைத்து வங்கியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் ஆகிய துறைகள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும். கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்தவித தாமதம் இன்றி பரிசீலனை செய்து உடனடியாக கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது கூட்டத்தில் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் மொத்தம் ரூ.21.08 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரிவதற்கான மானியத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் உள்பட அனைத்து மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளரும், மேலாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்