திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு கூட்டம்

திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-12 18:52 GMT

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தினசரி பெறப்படுகின்ற திடக்கழிவுகள் வீடு தோறும் 100 சதவீதம் முழுமையாக தூய்மை பணியாளர்கள் கொண்டு சேகரிக்கப்பட வேண்டும். சேகரிக்கப்பட்ட குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என்று தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்கா குப்பைகளை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் திடக்கழிவுகளை கையாள அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ள ஊராட்சிகளில் அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைந்து திடக்கழிவுகளை கையாள வேண்டும்.

அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இம்மாத இறுதிக்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திடக்கழிவு மேலாண்மை நிலையினை கையாளுவது குறித்து இசைவு சான்றிதழ் பெற வேண்டும், என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட மாசு கட்டுபாட்டு அலுவலர் ஜெயலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்