நாகூர் தர்கா சந்தனக்கூடு விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்

நாகையில் நாகூர் தர்கா சந்தனக்கூடு விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.

Update: 2022-10-27 18:45 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் நாகூர் தர்கா சந்தனக்கூடு விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.

ஆய்வு கூட்டம்

நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.. கூட்டத்திற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

போலீசார் நாகூர் கந்தூரி விழாவின்போது நாகை முதல் நாகூர் வரை உள்ள அனைத்து பகுதிகளிலும், தர்காவை சுற்றியுள்ள பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். நகராட்சி ஆணையர், தாசில்தார் உடன் இணைந்து ஊர்வலம் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மின்சார வாரியம் சார்பில் சந்தனக்கூடு ஊர்வலம் செல்லும் நாளில் மின் கம்பிகளால் பாதிப்பு ஏற்படாதவாறு தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை முன்கூட்டியே சரி செய்ய வேண்டும்.

சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

மழையால் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும்.தீயணைப்பு துறையினர் சார்பில் தர்கா குளம் மற்றும் நாகூர் கடற்கரையில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பைபர் படகுகளை தயார் நிலையில் வைத்து, விபத்து சமயத்தில் உதவ நீச்சல் வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.வட்டார போக்குவரத்து அலுவலர், விழா காலங்களில் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூல் செய்வதை கண்காணித்திட வேண்டும்.

பொதுப்பணித்துறை சார்பில் தர்கா குளத்தில் உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்து, விபத்துகளை தவிர்க்க தர்கா குளத்தில் நான்கு முனைகளிலும் உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.குளத்தை சுற்றி மூன்று நடை பாதைகளிலும் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதில். உதவி கலெக்டர்கள் (வளர்ச்சி) பிரிதிவிராஜ், பானோத் மருகேந்தர் லால், மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்