சட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்

சட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது.

Update: 2023-03-28 14:41 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள சாலைகளில் தேவைப்படுகின்ற இடங்களில் மின்விளக்குள், தடுப்புகள், வேகத்தடை, வழிகாட்டிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல். பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்துதல். இணைய வழி விளையாட்டு, மாணவர்களுக்கான அவசர உதவி எண்.1098, குழந்தை திருமண தடைச்சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, ரேமலதா, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மாரிமுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் காளியப்பன், ராமகிருஷ்ணன், தாசில்தார்கள் சிவப்பிரகாசம், குமார், மகாலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்