சாராய ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம்
மயிலாடுதுறையில் சாராய ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரியப்படுத்தி போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான விவரங்களை தெரிவிக்க 10587 இலவச அழைப்பு எண்ணிற்கோ அல்லது 8300018666 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், உதவி ஆணையர் (கலால்) நரேந்திரன், மாவட்ட மேலாளர் வாசுதேவன் உதவி கலெக்டர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல் துறை அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.