தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம் நெல்லை மின்பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள வளைய தரச்சுற்று (ஆர்.எம்.யு.) மற்றும் பிரிவுபடுத்துதல் செயல்பாடுகள் பற்றிய ஆய்வு கூட்டம், பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையப்படுத்துதல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வளைய தரச்சுற்றுகள், பிரிவுபடுத்துதல் செயல்பாடுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயற்பொறியாளர்கள் முத்துகுட்டி (நகர்ப்புறம்), முரளிதரன் (மேற்பார்வை கட்டுப்பாடு தரவு கையகப்படுத்துல்), மின்னளவி சோதனை பிரிவு ஷாஜகான், உதவி செயற்பொறியாளர்கள் எட்வர்டு பொன்னுசாமி, தங்கமுருகன், சங்கர், சின்னச்சாமி, ராஜகோபால், உதவி மின்பொறியாளர் ரத்தினவேணி, கார்த்திகுமார், வீரபத்திரகுமார், சாந்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.