டெல்டா மாவட்டங்களில் ஆய்வு - மகிழ்ச்சியளிக்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-05-31 14:43 GMT

திருச்சி,

டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு குறித்து திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. நீர் நிலை தூர் வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து நீர்வழித் தடங்களிலும் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. வடகிழக்கு பருவமழையின் போது சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்காமல் காக்கப்படும்.

டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை நீர் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் - 19, திருச்சி - 90, நாகை - 30, மயிலாடுதுறை - 49 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படுகிறது.

மகசூலை பெருக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். நடப்பாண்டில் 1.56 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்