அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-07-09 17:24 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அரசு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி அவர் பள்ளி வகுப்பறை, சமையல் கூடம், ஆய்வுக்கூடம், பணியாளர்கள் அறை போன்றவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவினை சாப்பிட்டும் பரிசோதனை செய்தார். தொடர்ந்து மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், தமிழக அரசு பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர் கல்வி பயிலும் மாணவர்கள் பாடத்திட்டங்களை அறிவதற்காக கல்லூரி கனவு என்னும் வழிகாட்டி நிகழ்ச்சி் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி வகுப்புகள்

மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பட்ட படிப்பினை திட்டமிட்டு விடாமுயற்சியுடன் கல்வி கற்கும் பட்சத்தில் வெற்றி எளிதாகும். அரசு பள்ளி ஆசிரியர்கள் சிறந்த முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் திறமையை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவம், பொறியியல் மற்றும் பிற பாடத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். உயர் கல்வி குறித்து மாணவர்கள் அறியும் வகையில் வாரத்திற்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்,

இந்த ஆய்வின் போது மாவட்ட கல்வி அலுவலர் பாலதிரிபுர சுந்தரி, உதவி திட்ட அலுவலர் சீதா லட்சுமி, தலைமை ஆசிரியர் கலாநிதி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்