மதுரையில் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு சிகிச்சை அளித்த பெண் கைது
மதுரையில் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, சிகிச்சை அளித்த பெண் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, சிகிச்சை அளித்த பெண் கைது செய்யப்பட்டார்.
வீட்டில் வைத்து மருத்துவம்
மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த பெண் ஒருவர், சுகாதாரத்துறை அதிகாரிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் சம்மட்டிபுரம், ஸ்ரீராம்நகர் மெயின் ரோடு மனோரஞ்சிதம் தெருவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் காளிதாசின் மனைவி யோகமீனாட்சி (வயது 39). இவர் பள்ளிபடிப்பு கூட முடிக்காமல் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வருகிறார்.
மேலும் அங்கு வரும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை, ஊசி போட்டு வருகிறார். இவரால் குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். போலி டாக்டரான அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கைது
அதன்பேரில் மதுரை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வராஜ், மருந்தாளுனர் பாலசெந்தில் ஆகியோர் நேரில் சென்று விசாரணை செய்தனர். அவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. உடனே இது குறித்து அதிகாரிகள் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் நடவடிக்கை எடுத்து யோகமீனாட்சியை கைது செய்தார்.
மேலும் விசாரணையில், அவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். அதன் மூலம் தெருவில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து மருந்து-மாத்திரை, ஊசிகளை போலீசார் கைப்பற்றினர்.