கைப்பந்து போட்டியில் மாணவர்கள் வெற்றி
கடையநல்லூர் குறுவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஜாய் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
கடையநல்லூர்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடையநல்லூர் குறுவட்டம் அளவிலான கைப்பந்து விளையாட்டு போட்டிகள் ஜாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் ஜாய் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் அனைத்து கைப்பந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான தகுதிச்சுற்றுக்கு தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், சங்கர சுப்பிரமணியன், சியாமீனா ஆகியோரை பள்ளி தாளாளர் சாலமோன், ஜெயா சாலமோன், பள்ளி முதல்வர் ஜோதி, துணை முதல்வர் கார்த்திகை கணபதி ஆகியோர் பாராட்டினர்.