பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 15-ந் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் தமிழக அரசு அறிவிப்பு

தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

Update: 2022-09-12 18:08 GMT

சென்னை, செப்.13-

அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்